/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி வளாகத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க வேண்டுகோள்
/
அரசு பள்ளி வளாகத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க வேண்டுகோள்
அரசு பள்ளி வளாகத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க வேண்டுகோள்
அரசு பள்ளி வளாகத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 06, 2025 01:29 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.துரிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரில், 100க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியரின் வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தப்படுவதால், மழை, வெயிலால் வாகனங்கள் பழுதாகிறது.
வெயிலில், பல சைக்கிள் டியூப்களில் காற்று இறங்கி விடுகிறது. இதனால் மாலையில் வீடு திரும்ப முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். திறந்தவெளியில் சைக்கிள் நிறுத்ததை தவிர்க்க, பள்ளி வளாகத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.