/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நல்லம்பள்ளியில் மழைமானி அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
நல்லம்பள்ளியில் மழைமானி அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
நல்லம்பள்ளியில் மழைமானி அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
நல்லம்பள்ளியில் மழைமானி அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 23, 2024 01:33 AM
தர்மபுரி, தமிழகத்தில், அனைத்து பகுதிகளிலும் பெய்யும் மழை அளவை துல்லியமாக கண்டறிய, 1,300 தானியங்கி மழை மானிகள், 103 வானிலை மானிகள் பொருத்தப்படும் என, அரசு கடந்தாண்டு அறிவித்தது. தர்மபுரி மாவட்டத்தில் தற்போது, ஏழு தாலுகாவில் எட்டு இடங்களில் தானியங்கி மழைமானி உள்ளன. ஒவ்வொரு மழைமானிக்கு இடையே, பல கி.மீ., துார இடைவெளி உள்ளது. இதனால், இரு மழை மானிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் பெரு மழை பெய்தாலும், அதனை துல்லியமாக பதிவு செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது.
மாவட்டத்தில் புதிதாக காரிமங்கலம், நல்லம்பள்ளி தாலுகா மற்றும் பொம்மிடி, வத்தல்மலை, ஏரியூர், பாப்பாரப்பட்டி, கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களில் மழை மானிகள் அமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதில், ஒரு சில இடங்களில் மழைமானி அமைக்க இடம் தேர்வு செய்தபின், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், நல்லம்பள்ளி தாலுகா இண்டூரில் ஆறு மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட மழைமானி, தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் மழைப்பொழிவு அளவு, வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம், மண்ணின் ஈரப்பதம் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிய முடியவில்லை.
எனவே, மாவட்டத்தில் தேர்வு செய்த இடங்களில், மழைமானி மற்றும் வானிலை மானி அமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

