/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நிரம்பிய 3 ஏரிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
நிரம்பிய 3 ஏரிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 29, 2025 01:19 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், 3 ஏரிகள் நிரம்பின.
சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன்படி, சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் அதிகளவில் மழை பெய்து வருகிறது.
இதனால் வாணியாறு அணைக்கு வரும் நீரால், அணையின் முழு கொள்ளளவான, 65.27 அடியில் தற்போது, 16 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஏற்காடு பகுதிகளில் பெய்த மழையால் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு வழியாக மீனாற்றில் வரும் நீரால், ஆலா புரம், ஓந்தியாம்பட்டி, தென்கரைகோட்டை ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. தென்கரைகோட்டையில் இருந்து வெளியேறும் உபரி நீர், கல்லாறு வழியாக, அரூர் பெரிய ஏரிக்கு செல்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.