/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
/
வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 01, 2025 12:58 AM
அரூர், அச்சல்வாடியில் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், விவசாயிகள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அச்சல்வாடியில், காட்டுகொட்டகை பகுதியில், 10க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், அங்குள்ள வழித்தடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வெளி பகுதிக்கு சென்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் பாதையில் பெரிய கற்களை போட்டு ஆக்கிரமிப்பு செய்ததுடன், விவசாயிகள் செல்வதை தடுத்துள்ளார். இதனால் மரவள்ளி உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை வெளியே எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தினர் கடந்த, 24ல் அரூர் போலீசில் புகார் அளித்தனர். சிவில் பிரச்னை என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது, ஆர்.டி.ஓ.,விடம் மனு அளியுங்கள் என போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து, ஆர்.டி.ஓ., விடம் விவசாயிகள் மனு அளித்தனர். அங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து, 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், நேற்று காலை, 9:30 மணிக்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆர்.டி.ஓ., செம்மலை, இப்பிரச்னைக்கு அரூர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
இதையடுத்து, 11:20 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் அரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு, வரும், 3ம் தேதிக்குள் வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால், 4ம் தேதி அரூர் தாலுகா அலுவலகத்தில், கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறி, அரூர் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகனிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.

