/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மங்களூர் - சென்னை ரயில் மொரப்பூரில் நின்று செல்ல வலியுறுத்தல்
/
மங்களூர் - சென்னை ரயில் மொரப்பூரில் நின்று செல்ல வலியுறுத்தல்
மங்களூர் - சென்னை ரயில் மொரப்பூரில் நின்று செல்ல வலியுறுத்தல்
மங்களூர் - சென்னை ரயில் மொரப்பூரில் நின்று செல்ல வலியுறுத்தல்
ADDED : நவ 01, 2025 12:59 AM
மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், நேற்று மாலை ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சரவணனிடம், மொரப்பூர் ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் ரகுநாதன் உள்ளிட்டோர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
மங்களூர்-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை, 3:40 மணிக்கு மொரப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், சந்திரகாரா-மதுரை-சந்திரகாரா, திருவனந்தபுரம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மொரப்பூர்- அப்பியம்பட்டி சாலையில், உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு பைப்லைன் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.