/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜன 09, 2025 08:06 AM
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சுற்றுவட்டார விவசாயிகள், கொத்தமல்லி கீரை சாகுபடி செய்துள்ளனர்.
இது, பாசன பகுதிகளை விட மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மழை தீவிரமாக பெய்யும் புரட்டாசி, ஐப்பசி மாதங்களை தவிர்த்து, கார்த்திகை பட்டத்தில், கொத்தமல்லி சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. கார்த்திகையில் விதைக்கப்பட்டு, தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. 'விலை கிடைத்தால் கீரைக்கு, விலையில்லா விட்டால், விதை உற்பத்திக்கு' என்று பயிரிடுவர்.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவியதால், மானாவாரியாக மல்லி பயிரிடுவது கிட்டத்தட்ட நின்று போய் விட்டது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை நன்-றாக பெய்தது. இதனால், பல ஆண்டு இடைவெளிக்கு பின், தற்-போது தான், மானாவாரி நிலங்களில் மல்லி சாகுபடியை விவசா-யிகள் துவக்கி உள்ளனர்.