ADDED : நவ 26, 2026 02:30 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: விவசாய பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், தமிழக சட்டசபை தேர்தல் வாக்குறுதி படி, கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.தர்மபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பயிர்களின் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
