ADDED : நவ 26, 2026 02:29 AM
தர்மபுரி: கார்த்திகை தீபத்திருவிழாவின், 2வது நாளான நேற்று, விஷ்ணு தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. பின் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி டவுனிலுள்ள கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், கோவில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. அதே போன்று, தர்மபுரி குமார சாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்ன
கேசவ பெருமாள் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது.
இதேபோல், தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி, வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பெருமாள் கோவில்களில் நேற்று விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு
வழிபாடு நடந்தது.
