sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வரட்டாறு தடுப்பணை கால்வாயை நீட்டிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

/

வரட்டாறு தடுப்பணை கால்வாயை நீட்டிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வரட்டாறு தடுப்பணை கால்வாயை நீட்டிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வரட்டாறு தடுப்பணை கால்வாயை நீட்டிக்க விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : அக் 06, 2025 04:05 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. இதன் மூலம், வள்ளிமதுரை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, குடுமியாம்பட்டி, அச்-சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும், கம்மாளம்பட்டி, ஒடசல்பட்டி, கல்லடிப்பட்டி உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட ஏரி-களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், வரட்டாறு தடுப்ப-ணையின் இடதுபுற கால்வாயை நீட்டிக்க, விவசாயிகள் வலியு-றுத்தி உள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

மழைக்காலங்களில் வரட்டாறு தடுப்பணை நிரம்பியவுடன் அதி-லிருந்து, உபரி நீர் வீணாக வெளியேறி வாணியாற்றில் சென்று, தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. இதை தடுக்கும் வகையில், மழைக்காலங்களில் வீணாகும் உபரிநீரை, ஏரிகளில் நிரப்புவ-துடன், பராமரிப்பு இல்லாமல் உள்ள கால்வாய்களை பொதுப்ப-ணித்துறையினர் துார்வார வேண்டும். மேலும், இடதுபுற கால்-வாயை டி.புதுார், பேதாதம்பட்டி செட்டி ஏரி வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us