/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொடர் விடுமுறை முடிந்து பணிக்கு செல்வோரால் பஸ் ஸ்டாண்டில் நெரிசல்
/
தொடர் விடுமுறை முடிந்து பணிக்கு செல்வோரால் பஸ் ஸ்டாண்டில் நெரிசல்
தொடர் விடுமுறை முடிந்து பணிக்கு செல்வோரால் பஸ் ஸ்டாண்டில் நெரிசல்
தொடர் விடுமுறை முடிந்து பணிக்கு செல்வோரால் பஸ் ஸ்டாண்டில் நெரிசல்
ADDED : அக் 06, 2025 04:06 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலுள்ள கல்லுாரி-களில் படித்து வருகின்றனர்.
இதேபோல், ஏராளமானோர் வெளி-யிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்று-கின்றனர். மேலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்-களிலும் கூலிவேலை செய்கின்றனர். பள்ளி காலாண்டு விடு-முறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறையில் கடந்த வாரம், சொந்த ஊருக்கு வந்திருந்தனர். தொடர்ந்து, விடுமுறை முடிந்து, தாங்கள் படிக்கும் இடங்களுக்கு மற்றும் பணியாற்றும் ஊர்க-ளுக்கு செல்ல வந்தவர்களால், தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை முதல் மாலை வரை, 5,000க்கும் மேற்பட்டோர் சென்னை, பெங்களூரு, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம், புறப்பட்டு சென்றனர்.இதேபோல், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், அரூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பொம்மிடி, மொரப்பூர், கம்பை-நல்லுார், காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பஸ் ஸ்டாண்ட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
* நேற்று காலை, 10:00 மணி முதல், அரூர் பஸ் ஸ்டாண்டில், ஏராளமானோர் குவிந்தனர். பஸ் இருக்கையில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறியதால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது. மாணவ, மாணவியரை வழியனுப்ப, அவர்களது பெற்றோரும் உடன் வந்-ததால், அரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராள-மான மாணவ, மாணவியர் விடுமுறை முடிந்து, வெளியூர் செல்ல, நேற்று காலை, 8:30 மணி முதல், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர்.