/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மக்களை தேடி மருத்துவ ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
/
மக்களை தேடி மருத்துவ ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
மக்களை தேடி மருத்துவ ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
மக்களை தேடி மருத்துவ ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
ADDED : அக் 06, 2025 04:06 AM
தர்மபுரி: மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க, முதல் மாநில மாநாடு தர்மபுரியில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் நிர்மலா தேவி சங்ககொடி ஏற்றி வைத்தார். வர-வேற்பு குழு தலைவர் பகத்சிங் வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் நாகராசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இதில், மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாத ஊதியமாக, 27,000 ரூபாய் வழங்க வேண்டும். மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கு மாதம், 5,500 ரூபாய் என்பதை, 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பணி சுமையை குறைக்க வேண்டும். சுகாதார துறையில் வெளி முகமை மூலம் பணி நியமனம் செய்யக்கூடாது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.