/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் கவலையில் விவசாயிகள்
/
மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் கவலையில் விவசாயிகள்
ADDED : டிச 30, 2024 02:48 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, மாம்பட்டி, கீரைப்பட்டி, பறையப்-பட்டி, தாமலேரிப்பட்டி, வடுகப்பட்டி, தொட்டம்பட்டி உள்-ளிட்ட சுற்று வட்டாரத்தில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்-கரில், விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். கடந்த சில வாரங்-களாக, நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் விளை நிலங்களில் சாய்ந்துள்ளதுடன், அவை முளைத்து வருகின்றன.
தற்போது, வயல்களில் ஈரப்பதம் அதிகளவில் உள்ளதால், நெல் அறுவடை செய்ய மிஷினை பயன்படுத்த முடியாத நிலை உள்-ளது. இதனால், நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.