ADDED : அக் 21, 2026 05:03 AM
அஞ்செட்டி:கிருஷ்ணகிரி
மாவட்டம், அஞ்செட்டி அருகே ஜேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர்
ஜான்மாரி, 41. விவசாயி; இவரும், ஜேசுராஜபுரம் அருகே கேரட்டி பாரதி நகரை
சேர்ந்த காளியப்பன், 45, என்பவரும் நண்பர்கள் ஆவர்;
கடந்த ஒன்றரை
ஆண்டுக்கு முன், காளியப்பன் தனது காரை ஜான்மாரிக்கு விற்றிருந்தார்.
அதற்கான மீதித்தொகை, 2 லட்சம் ரூபாயை, ஜான்மாரி வழங்காமல் இருந்தார்.
கடந்த, 17ம் தேதி காலை, 7:00 மணிக்கு, காளியப்பன் மற்றும் அவரது மகன்
விக்னேஷ், 25, ஆகியோர், ஜான்மாரியிடம் மீதி தொகையை தருமாறு கேட்டு
வற்புறுத்தியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில்
ஆத்திரமடைந்த தந்தை, மகன் இருவரும், ஜான்மாரியை மரக்கட்டையால்
தாக்கி மிரட்டினர். இதில் காயமடைந்த அவர், தேன்கனிக்கோட்டை அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அஞ்செட்டி போலீசில் அவர்
கொடுத்த புகார்படி, காளியப்பன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகியோரை,
நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
