தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மரத்தில் கார் மோதி விபத்து தந்தை, மகன் உயிரிழப்பு

 மரத்தில் கார் மோதி விபத்து தந்தை, மகன் உயிரிழப்பு

 மரத்தில் கார் மோதி விபத்து தந்தை, மகன் உயிரிழப்பு


ADDED : செப் 13, 2026 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 11:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில், ஆறுமுகம், 50, அவரது மகன் பிரவீன்குமார், 17, ஆகியோர் உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம், இ.கே.புதுாரை சேர்ந்தவர் ஆறுமுகம். நல்லம்பள்ளியை சேர்ந்தவர் சபரிமுருகன், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் மாதேஷ், 35. மூவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, காரில் திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவு, ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

இரவு, 11:30 மணியளவில், பென்னாகரம் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதியது. இதில் ஆறுமுகம், அவரது மகன் பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறுமுகத்தின் மனைவி சோபி, 38, சபரிமுருகன், அவர் மனைவி வெண்ணிலா, 23, மாதேஷ், அவர் மனைவி மஞ்சுளா, 35, அவர்களின் மகன் சதீஷ், 16, மகள் ஜெனிஷா, 10, உட்பட, ஏழு பேரும் படுகாயம் அடைந்தனர்.

பெரும்பாலை போலீசார், விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us