/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அஞ்செட்டி சாலையில் ஒற்றை யானையால் அச்சம்
/
அஞ்செட்டி சாலையில் ஒற்றை யானையால் அச்சம்
ADDED : செப் 16, 2025 02:11 AM
ஓசூர், கர்நாடகா மாநில வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரக்கட்டார் காப்புக் காட்டில் முகாமிட்டிருந்தது. இந்த யானை அப்பகுதியை சுற்றிலும் உள்ள நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.
நேற்று இந்த ஒற்றை யானை, அஞ்செட்டி சாலையோரம் நின்று கொண்டு, வாகனங்களில் சென்று வருவோரை பயமுறுத்திக் கொண்டிருந்தது. இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடியது. சில இளைஞர்கள், ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று மொபைல்போனில் 'செல்பி' எடுத்துக் கொண்டனர். எனவே, இந்த ஒற்றை யானையால் உயிர் பலி ஏற்படும் முன், அடர்ந்த வனப்பகுதிக்கோ அல்லது கர்நாடகா மாநிலத்திற்கோ விரட்ட, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.