ADDED : நவ 15, 2025 01:56 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நாகலுாரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி புவனா,36. இவர், அ.பள்-ளிப்பட்டி ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். தம்-பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராமச்சந்திரன் அ.பள்-ளிப்பட்டியில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வரு-கிறார். ராமச்சந்திரனுக்கு, புவனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்-பட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்-பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு புவனா சாப்பிடுவதற்கு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவ-ருக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு, 10:00 மணிக்கு வீட்டின் படுக்கைய-றையில் பேனில் புவனா துப்பட்டாவால் துாக்கு போட்டுள்ளார். இதைக் கண்ட உறவுக்கார பெண் ஒருவர் புவனாவை காப்பாற்றி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் புவனா அனுமதிக்கப்பட்டார். அ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

