/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பட்டாசு வெடித்ததில் பிளாஸ்டிக் குடோனில் தீ பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

ADDED : அக் 21, 2025 02:09 AM
வாலாஜா, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்றல் நகர் பகுதியில் கமல் பாட்ஷா, 40, என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி அளவில் தெருவில் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பறந்து பிளாஸ்டிக் குடோனில் விழுந்ததில், தீப்பிடித்தது.
அப்போது பலத்த காற்று வீசியதால், தீ வேகமாக மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த வாலாஜா தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், குடோன் முழுவதும் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்த வாலாஜா போலீசார் விசாரித்து வருகின்றனர்.