/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு
/
தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு
ADDED : அக் 17, 2024 01:29 AM
தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு
தர்மபுரி, அக். 17-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான, விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாலக்கோடு
பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் வருவாய்த்துறை, தீயணைப்புதுறை மற்றும் போலீசார் சார்பில், பொதுமக்களுக்கு வடகிழக்கு பருவமழை மற்றும் தீபாவளியில் பட்டாசு வெடிப்பது குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாலக்கோடு தாசில்தார் ரஜினி, இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், தீயணைப்பு நிலைய அலுவலர் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், மழையின்போது ஏற்படும் திடீர் வெள்ளத்தில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் சிக்கி கொள்ளும்போது அவர்களை மீட்பது, மின் விபத்தை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, மின் கம்பி அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்,
உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கினர்.
மேலும், தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு களை கைகளில் வைத்து வெடிக்கக் கூடாது. பற்ற வைத்து துாக்கி போடக்கூடாது. பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், துணை தாசில்தார் எழில்மொழி, மண்டல துணை தாசில்தார் நாராணமூர்த்தி, வி.ஏ.ஓ., மாதேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.