/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் காவிரியாற்றில் தீயணைப்பு துறை ஒத்திகை
/
ஒகேனக்கல் காவிரியாற்றில் தீயணைப்பு துறை ஒத்திகை
ADDED : செப் 30, 2025 02:17 AM
பென்னாகரம், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முறைகள் குறித்து, தீயணைப்புத்துறையினர் நேற்று, முன்னெச்சரிக்கை ஒத்திகையில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு பருவமழையின் போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் தீயணைப்பு நிலையை அலுவலர் சந்தோசம் தலைமையில் பென்னாகரம், ஒகேனக்கல் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணியாளர்கள் ஒன்றிணைந்து, மழைக்காலங்களில் ஆபத்தான நீர் நிலைகள் மற்றும் ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவர்களை காப்பாற்றி மீட்கும் முறை, மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறைகள், குறித்து, ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறை பகுதியில் ஒத்திகை மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். காவிரியாற்றில் ஆழமான பகுதிகளில் குளிப்பதை தவிர்க்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கூத்தப்பாடி வி.ஏ.ஓ., பொற்கொடி மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.