/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீயணைப்பு துறை தளவாடங்கள் காட்சிப்படுத்தல்
/
தீயணைப்பு துறை தளவாடங்கள் காட்சிப்படுத்தல்
ADDED : அக் 27, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, அக். 27-
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து, தளவாட பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பரவலாக தொடர் மழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதில், நிலமட்ட கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கால்நடைகள் விழுந்து உயிரிழக்கும் நிலை உள்ளது. இதையொட்டி, நீர்நிலைகளில் சிக்கும் கால்நடைகள் மற்றும் பொதுமக்களை மீட்கும் கருவிகள் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், கலெக்டர் அலுவலக
வளாகத்தில் காட்சி படுத்தப்பட்டது.