/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இன்றும், நாளையும் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
/
இன்றும், நாளையும் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
இன்றும், நாளையும் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
இன்றும், நாளையும் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : அக் 11, 2025 12:25 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்தில், தீ பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில். 'வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.
தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, கற்பிக்கும் வகையில் விழிப்புணர்வு நடக்கிறது. காலை, 10:00 முதல், 11:00 மணி, மதியம், 12:00 முதல்,1:00 மணி வரை மற்றும் மாலை, 4:00 முதல் 5:00 மணி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த திட்டம் முற்றிலும் இலவசமானது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என, பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய
அலுவலர் செந்தில் தெரிவித்துள்ளார்.