ADDED : ஜூன் 08, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தீய-ணைப்பு நிலையத்தில், 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, கடந்த இரண்டு நாட்களாக நிலைய அலுவலர் (பொ) செந்தில்குமார்,
பிரகாசம் தலைமையில் நடந்தது. இதில் தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது பற்றியும், நிலையத்திலுள்ள சிறப்பு உபகரணங்-களை எவ்வாறு இயக்குவது குறித்தும், மழை புயல் பேரிடர் காலங்களில், மக்களை எவ்வாறு காப்பாற்றுவது, உள்ளிட்ட தீ தடுப்பு உபகரணங்-களை கையாள்வது பற்றி, தீயணைப்பு வீரர்கள் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
