ADDED : ஏப் 20, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில், சிறப்பு நிலைய அலுவலர் தெய்வம் தலைமையில், தீ தொண்டு வாரத்தையொட்டி, தீயணைப்பு பயிற்சி அளித்தனர். இதில், தீயணைப்பு துறை பணியாளர்கள்,
பாலக்கோட்டிலுள்ள, சிலம்பம் பயிற்சி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, தீ விபத்தின் வகைகள் மற்றும் தீயை அணைக்கும் முறைகள் குறித்து, தீயணைப்பான்களை பயன்படுத்தி ஒத்திகை பயிற்சி அளித்தனர்.