/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு 12வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை

ADDED : அக் 29, 2024 01:21 AM
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
12வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி, அக். 29-
தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெய்த மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த, 25ல் அணைக்கு அதிகபட்சமாக, 6,205 கன அடி நீர்வரத்தால் அணையிலிருந்து, 6,338 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.
கடந்த, 2 நாட்களாக மழையின்றி அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 2,121 கன அடியாக சரிந்தது. அணை நீர்மட்டம், 50.15 அடியாக உள்ளதால், அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதும் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டதால் நேற்று, 12வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்வதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.