/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
/
மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
ADDED : டிச 03, 2024 07:12 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நேற்று காலை நிலவரப்படி, 198 மி.மீ., மழை பதிவாகியது. வாணியாறு அணைக்கு அதிக நீர்வரத்தால் அணை
நிரம்பி, நேற்று முன்தினம் வினாடிக்கு, 2,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று,
3,750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், வாணி-யாற்றில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆற்றங்கரையோர பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் வெள்ளம்
புகுந்தது. இதே போன்று, ஏற்காடு மலையில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தால்
மீனாறு, பீனியாறு, வேப்பாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
பாப்பிரெட்டிப்-பட்டி பேரூராட்சி அலமேலுபுரம், சமத்துவபுரம் அதிகாரப்பட்டி
பகுதிகளில் ஆற்றில் ஆக்கிரமிப்பால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடுகிறது. சமத்துவபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்தது.
கல்வராயன் மலை பகுதியில் இருந்து வரும் வெள்ளம் பெரும்பள்ளும் வழியாக சென்று
வாணியாற்றில் செல்கிறது. வேப்பாடி ஆற்றில் ஏற்பட்ட வெள்-ளப்பெருக்கால்
கோட்டமேடு, சாலைவளசு உள்ளிட்ட பகுதி-களில், 10க்கும் மேற்பட்ட மின்
கம்பங்கள் உடைந்து விழுந்-ததால் மின்சாரம் தடைப்பட்டது.
போதக்காடு, மீனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பையர்-நத்தம் ஏரி நிரம்பியது.
தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. பாதிக்கப்-பட்ட பகுதிகளில் சுற்றுலா துறை அமைச்சர்
ராஜேந்திரன், தி.மு.க., மாவட்ட செயலாளர் பழனியப்பன் பார்வையிட்டு
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கினர்.பொம்மிடி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சென்னை - -சேலம் மார்க்கமாக
செல்லும் ரயில்கள் மெதுவாக இயக்க அறிவு-றுத்தப் பட்டுள்ளது. பொம்மிடி - -தொப்பூர்,
செல்லும் ரயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து
துண்-டிக்கப்பட்டுள்ளது.
வத்தல்மலையில் பெய்த மழையால் பொதியம்பள்ளம் அணைக்-கட்டு நிரம்பியது.
அங்கிருந்து கள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்-பட்டுள்ளது. கடத்துார்,
புளியம்பட்டி, தாளநத்தம், புட்டிரெட்டிப்-பட்டி, நொச்சி குட்டை, பசுவாபுரம்,
தென்கரை கோட்டை வழி-யாக காற்றாற்று வெள்ளம் சென்றது. இதில்
புட்டிரெட்டிப்பட்டி பகுதியில் ரகு என்பவரின் வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த
கன்டெய்னர் லாரி, காட்டாற்று வெள்ளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.