/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு
/
சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு
ADDED : டிச 03, 2024 07:14 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பாயும் சனத்குமார்
நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்-டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொடக்கேரி, கோம்பை, குளியனுார் உள்ளிட்ட
மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், தர்மபுரி அடுத்த அன்னசாகரம் ஏரிக்கு வரும்.
இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீர், சனத்குமார் நதியில் பாய்ந்து, கிருஷ்ணகிரி
மாவட்டம் இருமத்துார் ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில், தர்ம-புரி மாவட்டத்தில்
கடந்த, 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், இந்த ஆற்றில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பாரதிபுரத்தில் இருந்து அழகாபுரிக்கு செல்லும் குறுக்கு வழிப்பாதை, இந்த
ஆற்றின் வழியாக செல்கிறது. தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ளதால், பாரதிபுரத்தில் இருந்து குறுக்கு வழியாக அழகாபுரிக்கு செல்லும்
பொதுமக்கள், நடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.