/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி
/
உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி
ADDED : டிச 28, 2024 02:46 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா ஆலோசனைப்படி, பாலக்கோடு வட்டார வள மைய வளாகத்தில், அங்கன்வாடி மைய உதவியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், பாலக்கோடு குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வை-யாளர்கள் கலா, இந்திராகாந்தி மற்றும் கண்காணிப்பாளர் மனோன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணை-யத்தால் அங்கீகாரம் பெற்ற பயிற்றுனர் காமேஷ், அங்கன்வாடி மைய உதவியாளர்களுக்கு பயிற்றுவித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா அங்கன்வாடி மையங்களில் உணவு மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்து கடை பிடிக்க வேண்டியவை குறித்து அறிவுறுத்தினார்.

