ADDED : அக் 14, 2025 02:31 AM
பென்னாகரம், பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பென்னாகரம் நகரம், பருவதனள்ளி, வண்ணாத்திப்பட்டி, ஆதனூர் மற்றும் கடமடை, ஒகேனக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழுவினர் இனிப்பு, காரம் தயாரிக்கும் இடங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, மூலப்பொருட்கள், சமையல் எண்ணெய், நெய் தரமானதாகவும் உரிய காலாவதி தன்மை உடையதாக இருக்கவும் செயற்கை நிறமேற்றிகள் இனிப்புகளில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவும், காரவகைகளில் ஒரு சிலவற்றை தவிர வேறு எதிலும் அறவே உபயோகப்படுத்தக் கூடாது எனவும், தன் சுத்தம், சமையலறை மற்றும் சுற்றுப்புறம் சுகாதாரம் பேண வேண்டும், பணியாளர்கள் தன் சுத்தம் பராமரித்தலுடன் உரிய ஆடைகள் அணிந்துள்ளனரா, என கண்காணிக்கப்பட்டது.
இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் சம்பந்தப்பட்ட கடை, தயாரிப்பு வணிகர்களுக்கு வழங்கி கண்டிப்பாக பின் பற்ற வலியுறுத்தினார். விதிமுறைகள் மீறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இனிப்பு, கார வகை மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.