/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சட்டவிரோத செயலுக்கு துணை போகும் வனத்துறை: புகார் மனு
/
சட்டவிரோத செயலுக்கு துணை போகும் வனத்துறை: புகார் மனு
சட்டவிரோத செயலுக்கு துணை போகும் வனத்துறை: புகார் மனு
சட்டவிரோத செயலுக்கு துணை போகும் வனத்துறை: புகார் மனு
ADDED : மார் 11, 2025 06:32 AM
தர்மபுரி: தர்மபுரி, எ.கோடுப்பட்டி விவசாயிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா எ.கோடுப்பட்டியில் நாங்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தும், வனத்தில் உள்ள சிறு மகசூல் சேகரித்து, வாழ்வாதாரம் பெற்று வருகிறோம். கடந்த காலங்களில் இருந்த வனத்துறை அதிகாரிகள் மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் பாதுகாப்பாக இருந்தனர். இன்றுள்ள அதிகாரிகள் காட்டை அழித்து வருகின்றனர். இதனால், வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி, அருகே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் புகுந்து, விவசாய நிலங்களை நாசம் செய்து, உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
வனத்துறையினரோ, வன பகுதியை ஒட்டி நீங்கள் ஏன் குடியிருக்கிறீர்கள், நீங்கள் குடியிருப்பதால் பயிர் மற்றும் உயிர் சேதம் ஏற்படதான் செய்யும். இதற்கு வனத்துறை பொறுப்பேற்காது என பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கின்றனர். மேலும், சட்ட விரோதமாக வன விலங்குகளை வேட்டையாடும் நபர்களுக்காக, கால்நடை மேய்பவர்கள், வன பகுதி உள்ளே இருந்தால் அவர்களை காட்டி கொடுத்து விடுவார்கள் என ஆடு, மாடு மேய்பவர்களை வனத்தில் விட மறுக்கின்றனர். இதற்கு வன ஊழியர்கள் உடந்தையாக உள்ளனர். இது குறித்து, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தனர்.