/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் வனப்பகுதியையொட்டி டாஸ்மாக் இடமாற்றம் செய்ய வனத்துறை வலியுறுத்தல்
/
அரூரில் வனப்பகுதியையொட்டி டாஸ்மாக் இடமாற்றம் செய்ய வனத்துறை வலியுறுத்தல்
அரூரில் வனப்பகுதியையொட்டி டாஸ்மாக் இடமாற்றம் செய்ய வனத்துறை வலியுறுத்தல்
அரூரில் வனப்பகுதியையொட்டி டாஸ்மாக் இடமாற்றம் செய்ய வனத்துறை வலியுறுத்தல்
ADDED : மே 17, 2024 02:35 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் நான்குரோட்டிலிருந்து, கடத்துார் செல்லும் சாலையிலுள்ள, டாஸ்மாக் கடை, 13 ஆண்டு
களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. வனப்பகுதியிலுள்ள இக்கடையை இடமாற்றம் செய்ய, மாவட்ட நிர்வாகத்திடம் வனத்துறை வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, டாஸ்மாக்
அதிகாரிகள் கூறியதாவது:
வனப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால், மான் உள்ளிட்ட விலங்குகள் இறப்பதாக கூறி, கடையை காலி செய்ய, மாவட்ட வன அலுவலர், அரசுக்கு கடிதம் அளித்துள்ளார். அதன்படி கடையை இடமாற்றம் செய்ய, மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. இக்
கடையில் நாளொன்றுக்கு, 15 லட்சம் ரூபாய் வரை விற்
பனையாகிறது. அரூர் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த, 50,000க்கும் மேற்பட்டோர் இங்கு வருகின்றனர்.
இக்கடையை விட்டால், 18 கி.மீ., துார சிந்தல்பாடி, மொரப்பூர், பாளையத்திலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மதுபாட்டில்களால், இதுவரை வன
விலங்குகள் எதுவும் உயிரிழக்கவில்லை. புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க யாரும் இடம் கொடுக்க மறுக்கின்றனர். வனப்பகுதியை சுற்றி, கம்பி அல்லது முள்வேலியை வனத்துறை அமைக்க வேண்டும்.
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில், மது பாட்டில்கள் அனைத்தும் திரும்ப பெறப்படுகிறது. இதனால், வனவிலங்குகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ''அரூரில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இது நீண்ட நாள் கோரிக்கை. ஏற்கனவே, வனப்
பகுதியை ஒட்டி டாஸ்மாக் கடை இருக்கக்கூடாது, வனத்தில் மதுபாட்டில்களை போடக்கூடாது என, பல உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது,'' என்றார்.

