/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முன்னாள் எம்.எல்.ஏ.., அரங்கநாதன் 33-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
/
முன்னாள் எம்.எல்.ஏ.., அரங்கநாதன் 33-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
முன்னாள் எம்.எல்.ஏ.., அரங்கநாதன் 33-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
முன்னாள் எம்.எல்.ஏ.., அரங்கநாதன் 33-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : நவ 12, 2025 01:32 AM
தர்மபுரி-, தர்மபுரி,- கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளருமான வெற்றிவேலின் தந்தையும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான அரங்கநாதனின், 33-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, தர்மபுரி மதிகோன்பாளையம் எஸ்.ஆர்., ரைஸ் மில் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், எம்.ஜி.ஆர்., மற்றும் எஸ்.ஆர்., அறக்கட்டளை நிறுவனர் வெற்றிவேல் தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் மரகதம் வெற்றிவேல், இயக்குனர்கள் ரேணுகாதேவி, நிரேஷ்குமார், தொழிலதிபர் அண்ணாதுரை, நிர்வாகிகள் முன்னா, மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அரங்கநாதன் உருவ படத்திற்கு ஏராளமானோர் மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். இதில்,
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தொழு நோயாளிகள், 200 பேருக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் ஆண்டுதோறும் வழங்கப்படும் முதியோருக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னதாக, மதிபோன்பாளையத்திலுள்ள அவரது நினைவிடத்தில், மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், தொழிலதிபர்கள், அரிசி அரவை ஆலை உரிமையாளர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

