/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி ஹெச்.எம்.,ஐ கண்டித்து மாஜி பஞ்., தலைவர் உண்ணாவிரதம்
/
அரசு பள்ளி ஹெச்.எம்.,ஐ கண்டித்து மாஜி பஞ்., தலைவர் உண்ணாவிரதம்
அரசு பள்ளி ஹெச்.எம்.,ஐ கண்டித்து மாஜி பஞ்., தலைவர் உண்ணாவிரதம்
அரசு பள்ளி ஹெச்.எம்.,ஐ கண்டித்து மாஜி பஞ்., தலைவர் உண்ணாவிரதம்
ADDED : நவ 11, 2025 06:43 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த முத்துக்காபட்டியில் அரசு மேல்நிலைப்-பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 300க்கும் மேற்-பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி விடுமுறை நாளான, கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை அன்று, சில மர்ம நபர்கள் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, கட்டட சுவர்களில் முகம் சுளிக்கும்படி ஆபாச சித்திரங்களை வரைந்தும், எழுதியும் வைத்துள்ளனர். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஆசிரி-யர்கள், இதைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். பின், பள்ளி நிர்-வாகம் சார்பில் ஆபாச சித்திரங்கள், எழுத்துக்களை பெயின்ட் பூசி மறைத்தனர்.
இந்நிலையில், முத்துக்காபட்டி பஞ்., முன்னாள் தலைவர் அருள்ராஜேஷ், நேற்று காலை, 10:00 மணிக்கு அரசு பள்ளி நுழைவு வாயில் முன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், ''பள்ளியில் போதை பழக்க சிந்-தனை அதிகரித்து வருகிறது. போதைக்கு அடிமையான மாண-வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து, பள்-ளியில் சில மாதங்களாக பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூட்டம் நடைபெறவில்லை. 'சிசிடிவி' கேமரா அமைத்தும் எந்தவித பயன்பாடின்றி உள்ளது. இதனால், பள்ளியை சரிவர கண்டு-கொள்ளாமல் உள்ள தலைமை ஆசிரியர் இளங்கோவன் மீது கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்து நடவ-டிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

