/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
செவன்த்- டே மெட்ரிக் பள்ளியில் தீயணைப்பு துறை பேரிடர் ஒத்திகை
/
செவன்த்- டே மெட்ரிக் பள்ளியில் தீயணைப்பு துறை பேரிடர் ஒத்திகை
செவன்த்- டே மெட்ரிக் பள்ளியில் தீயணைப்பு துறை பேரிடர் ஒத்திகை
செவன்த்- டே மெட்ரிக் பள்ளியில் தீயணைப்பு துறை பேரிடர் ஒத்திகை
ADDED : நவ 11, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, வடகிழக்கு பருவமழையை ஒட்டி, பேரிடர் மீட்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, செவன்த்- டே மெட்ரிக் பள்ளியில் நடந்தது. தர்மபுரி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முரளி தலைமையில், பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார்.
பருவமழை காலங்களில், பள்ளி மாணவர்கள் இடி, மின்னலில் இருந்தும், நீர்நிலைகளுக்கு செல்லும்போது, தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது என்ற, விழிப்புணர்வு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தீயணைப்புதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.