/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
செறிவூட்டப்பட்ட உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
செறிவூட்டப்பட்ட உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 07, 2025 01:04 AM
தர்மபுரி, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், செறிவூட்டப்பட்ட உணவு தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று துவக்கி வைத்து, 'செறிவூட்டப்பட்ட அரிசியை பற்றி அறிந்து கொள்வோம்' என்ற துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து, தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியை ஆய்வு மேற்கொண்டு, தினசரி பட்டு கூடுகள் விலை விபர பட்டியல்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் பட்டு வளர்ப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதில், நகராட்சி சேர்மன் லட்சுமி, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ரங்கபாப்பா, நகராட்சி கமிஷ்னர் சேகர், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், நகர் நல அலுவலர் லட்ஷியவர்ணா, உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.