ADDED : நவ 29, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி கோட்டம், அரூர் நெடுஞ்சாலை உட்கோட்ட பராமரிப்பில் உள்ள, திருவண்ணாமலை-அரூர் (வழி) தானிப்பாடி சாலை முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம், 2024-25 திட்டத்தில், 9 கி.மீ., சாலையை, இரு கட்டங்களாக சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. சாலை பணியை, சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன், சாலையின் கனம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், நரிப்பள்ளி அருகே கல்லாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும், உயர்மட்ட பாலம் பணியின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் உள்ளிட்ட தொடர்புடைய பொறியாளர்கள் உடனிருந்தனர்.

