/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆமை வேகத்தில் நான்கு வழிச்சாலை பணி;வாகன ஓட்டிகள் அவதி
/
ஆமை வேகத்தில் நான்கு வழிச்சாலை பணி;வாகன ஓட்டிகள் அவதி
ஆமை வேகத்தில் நான்கு வழிச்சாலை பணி;வாகன ஓட்டிகள் அவதி
ஆமை வேகத்தில் நான்கு வழிச்சாலை பணி;வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 27, 2024 06:54 AM
அரூர் : அரூர் அருகே, நான்குவழிச்சாலை பணி ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், அரூர் வழியாக, தர்மபுரி--தானிப்பாடி இடையே, 410 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 2022 ஜூன்., 19ல் அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்நிலையில் தீர்த்தமலையில் இருந்து தானிப்பாடி வரை, நான்குவழிச்சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. பணிகள் துவங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இதற்காக, சாலையின் இருபுறமும் தோண்டப்பட்டு, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன.
தோண்டப்பட்ட பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளன. மற்றொருபுறம், மண் துாசி வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்க, மழை பெய்தால் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் விரிவாக்க பணியால், வாகன ஓட்டிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, நான்குவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

