/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
/
குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : டிச 27, 2024 12:56 AM
குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
தர்மபுரி, டிச. 27-
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வனக்காப்பாளர், டைப்பிஸ்ட், சுருக்கெழுத்து ஆகிய பணிகளுக்கான குரூப், 4 தேர்வு அடுத்த ஆண்டு ஜூலை, 13ல் நடக்கவுள்ளது. இத்தேர்வுக்காக மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தில், தேர்வு எழுதவுள்ளோருக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி இன்று துவங்கி, வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன. இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு, தேர்வர்களுக்கென, 3,000 க்கும் மேற்பட்ட நுால்கள் அடங்கிய நுாலக வசதி, இலவச வைபை மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள், விபரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை நேரிலோ அல்லது 04342 - 288890 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.