ADDED : அக் 03, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர் அடுத்த பொய்யப்பட்டியில், காந்திஜெயந்தியை
முன்னிட்டு, இலவச பொதுமருத்துவ முகாம், நடந்தது.
மருத்துவர்கள் சதீஷ், குறளரசன், மூர்த்தி, ஷில்பா, சுகதேவ்,
கார்மேகம், ஹரிராஜ் உள்ளிட்டோர், மக்களுக்கு இலவச மருத்துவ
பரிசோதனை செய்து, தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.புற்றுநோயை
ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவம், பெண்கள் தங்களது
உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம், உணவுப் பழக்கம்,
தினசரி உடற்பயிற்சி மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்தும்
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை அப்பகுதி
பொதுமக்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.
