ADDED : ஜூன் 11, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ராமர் தீர்த்தம், அக்னி தீர்த்தம், கவுரி தீர்த்தம் உள்ளிட்டவைகள் உள்ளன. இதன் தெற்கே வேப்பம்பட்டி வனப்பகுதியில் எமதீர்த்தம் உள்ளது.
வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் எம தீர்த்தத்தில் நீராடி விட்டு, வடிவாம்பிகை தாயார், விநாயகர், நந்தியம் பெருமான், எமதர்மர், சண்டிகேஸ்வரர், 7 தேவ கன்னிமார் தரிசனம் செய்து, பின்னர் மரண பயம் போக்கும் எம தீர்த்தகிரீஸ்வரரை வழிபட்டனர்.