ADDED : மே 04, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இண்டூர், : தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நத்தஹள்ளியில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை தேர் திருவிழா கடந்த ஏப்.,22-ல் கொடியேற்றுடன் துவங்கியது.
இந்நிலையில், நேற்று விநாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை மறுநாள், மே 6 அன்று, 18 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஒன்றுகூடி காளியம்மன் சித்திரை தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.அதனை தொடர்ந்து, மே 10- ல் மஞ்சள் நீராட்டுதல் மற்றும் பந்தகாசி விழாவுடன் கோவில் நிகழ்ச்சி
நிறைவடைகிறது.