ADDED : செப் 27, 2025 01:33 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்கள், தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்
கழிவுகள், பழைய வீட்டு உபயோக பொருட்கள், தளவாட சாமான்கள், வீட்டில் அகற்றப்படும் குப்பைகளை பள்ளி சுற்றுச்சுவர் தாண்டி வளாகத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி பள்ளியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மலை போல் பள்ளி வளாகத்தில் குப்பை தேங்கியது.
இதையடுத்து ஆசிரியர்கள் கோரிக்கையை அடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் உத்தரவின்படி, பள்ளி வளாகத்தில் இருந்த குப்பைகளை துாய்மை பணியாளர்கள் அகற்றினர். பள்ளி வளாகத்திற்குள் குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.