/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'ஜி.ஹெச்.,ல் நோயாளிகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டும்'
/
'ஜி.ஹெச்.,ல் நோயாளிகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டும்'
'ஜி.ஹெச்.,ல் நோயாளிகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டும்'
'ஜி.ஹெச்.,ல் நோயாளிகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டும்'
ADDED : நவ 20, 2024 01:49 AM
'ஜி.ஹெச்.,ல் நோயாளிகளுக்கு ஏற்ப
கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டும்'
பென்னாகரம், நவ. 20-
''அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்,'' என, மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நேற்று துவங்கிய, மா.கம்யூ., கட்சியின் கலையரங்க மாநில பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மா.கம்யூ., கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில், தி.மு.க., மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பயணத்தை தொடர்கிறது. அதே சமயத்தில், தி.மு.க., அரசின் திட்டங்கள் மீது சில மாற்றுக்கருத்துகள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில், காவிரி உபரிநீர் திட்டத்தை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதற்காக, மருத்துவர் செவிலியர், மருத்துவ பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். ஏற்கனவே பணியாற்றி வருவோரை அரசு பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

