ADDED : ஆக 09, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம், பென்னாகரம் அடுத்த சிடுவம்பட்டியில் செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்ப்பு குறித்த அட்மா திட்ட பயிற்சியானது நேற்று, நடந்தது. பென்னாகரம் வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன் தலைமை வகித்தார்.
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் விஞ்ஞானி இந்துமதி தோட்டக்கலை பயிற்சிகள் உற்பத்தி கூட்டுவது குறித்து விளக்கினார். கால்நடை மருத்துவர் ஹரிகிருஷ்ணன், கால்நடை துறை சார்ந்த ஆடு, மாடு வளர்ப்பில் குடற்புழு நீக்கம், தீவன மேலாண்மை குறித்து கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் ராஜதுறை வேளாண் துறை மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த
வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து எடுத்துறைத்தார்.

