/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
/
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
ADDED : ஜூலை 28, 2025 04:14 AM
போச்சம்பள்ளி: தமிழகத்தில் ஆக., 3-ல் ஆடி, 18- ஆடிபெருக்கு விழா கொண்டா-டப்படுகிறது. இந்நாளில் மக்கள் நீர்நிலைகள், குலதெய்வ கோவில்களில் கோழி, ஆடுகளை பலியிட்டு, உறவினர்களுக்கு விருந்து அளிப்பது வழக்கம்.
இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று கூடிய வாரச்சந்தைக்கு அதிகளவு ஆடுகள், கோழிகள் விற்-பனைக்கு வரும் என பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில், குறைந்தளவே ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால், 12 முதல், 15 கிலோ எடையுள்ள ஆடுகள், 11,000 முதல், 12,000 ரூபாய் வரையும், 15 முதல், 18 கிலோ எடை-யுள்ள ஆடுகள், 12,000 முதல், 15,000 ரூபாய் வரையும் விற்ப-னை
யானது.
இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 25 லட்சம் ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்-தனர். அதேபோல் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவ-சாயிகள், வழக்கத்தை விட, கூடுதல் விலைக்கு
விற்றதால், மகிழ்ச்சி அடைந்தனர்.