/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.34 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
/
ரூ.34 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
ADDED : பிப் 16, 2024 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி:வட சந்தையூர் சந்தையில், 34 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த வட சந்தையூரில் நேற்று கூடிய சந்தைக்கு, திப்பம்பட்டி, ஏற்காடு, கோபிநாதம்பட்டி, கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 300 ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஓரு ஆடு, 3,000 முதல், 12,000 ரூபாய் வரை விற்பனையானது. அதன்படி நேற்றைய சந்தையில், 34 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.