/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோபாலம்பட்டி சாலை சேதம் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
/
கோபாலம்பட்டி சாலை சேதம் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
கோபாலம்பட்டி சாலை சேதம் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
கோபாலம்பட்டி சாலை சேதம் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
ADDED : அக் 12, 2024 01:03 AM
கோபாலம்பட்டி சாலை சேதம்
லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
தர்மபுரி, அக். 12-
சாலை சேதமடைந்ததால், தரமான சாலை அமைத்து தரக்கோரி, தமிழ்நாடு வாணிப கழக கிடங்கிற்கு வந்த லாரிகளை நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, கோபாலம்பட்டியில் தமிழ்நாடு வாணிப கழக அரிசி சேமிப்பு கிடங்கு உள்ளது. இதற்காக, நல்லம்பள்ளி - பூதனஹள்ளி வழியாக, செல்லும் சாலையை சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இதில், கோபாலம்பட்டி சென்னியம்பட்டி, கந்துக்கால்பட்டி உள்ளிட்ட, 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 1,400 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சேமிப்பு கிடங்கிற்கு அதிக அளவில் லாரிகள் வந்து செல்வதால், அப்பகுதி சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், பணிக்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு, சேமிப்பு கிடங்கிற்கு அரிசி லோடு ஏற்றி வந்த, 20 -க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், கோரிக்கை குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து, 2 மணி நேரத்திற்கு பின், சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை பொதுமக்கள் விடுவித்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.