/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பஸ் - டிராக்டர் மோதல்: 10 பேர் காயம்
/
அரசு பஸ் - டிராக்டர் மோதல்: 10 பேர் காயம்
ADDED : ஜூன் 23, 2025 05:27 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் அருகே, அரசு பஸ் - டிராக்டர் மோதிய விபத்தில், 10 பேர் காயமடைந்தனர்.
தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டிலிருந்து, சேலம் நோக்கி, அரசு பஸ் நேற்று மாலை, 6:00 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் நாராயணன், 58, ஓட்டினார். பஸ்சில், கண்டக்டர் மாதேசன், 52, மற்றும் 40க்கும் மேற்பட்ட
பயணிகள் இருந்தனர்.
அரசு பஸ், தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் சென்றபோது, தங்கம் மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே, கால்நடை தீவன ராகி தாள் ஏற்றி வந்த டிராக்டர் சாலையை
கடந்தது.
அப்போது நிலைதடுமாறி அரசு பஸ், டிராக்டர் மீது மோதியது. தர்மபுரி டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்-பவ இடம் சென்று, விபத்தில் காயமடைந்த, 7 பயணிகள், பஸ் டிரைவர் நாராயணன், கண்டக்டர் மாதேசன், டிராக்டர் டிரைவர் கார்த்திகேயன் ஆகிய, 10 பேரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ-மனைக்கு அனுப்பி
வைத்தனர்.
டிராக்டரின் முன்பகுதி துண்டாகி சாலையில் விழுந்தது. இந்த விபத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்-தது. தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் வேலுதேவன், போக்குவ-ரத்து பிரிவு எஸ்.ஐ.,
சரவணன் மற்றும் போலீசார், விபத்தில் சிக்கிய அரசு பஸ் மற்றும் டிராக்டரை, கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி, போக்-குவரத்தை
சீர்செய்தனர். தர்மபுரி டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.