ADDED : அக் 14, 2025 02:33 AM
தர்மபுரி, சென்னையில் கடந்த, 12ல் நடந்த செயற்குழு முடிவின்படி, கடந்த ஜூலை 1 முதல் நிலுவையில் உள்ள, 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக தீபாவளிக்கு முன்பாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று மாலை தமிழகம் முழுவதும் வட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க, மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை, ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் புகழேந்தி கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பாலக்கோட்டில் வட்ட செயலாளர் பாரதி செல்வம், காரிமங்கலத்தில் வட்ட தலைவர் சாலம்மாள், பாப்பிரெட்டிபட்டியில் வட்ட செயலாளர் பழனிசாமி, வட்ட தலைவர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை, ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.
இதேபோல், ஊத்தங்கரை மற்றும் தேன்கனிக்கோட்டை யிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.