ADDED : பிப் 11, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடத்துார்: கடத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா, தலைமை ஆசிரியை அழகம்மாள் தலைமையில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவி அருள்மொழி, துணைத்தலைவர் சேட்டு, உறுப்பினர்கள் இளமதி, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை
அனுராதா வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.கடத்துார் பேரூராட்சி தலைவர் மணி விளையாட்டு போட்டி-களில், மாநில அளவில் வெற்றி பெற்ற
மாணவியருக்கும், கலைநி-கழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவியருக்கும் பரிசளித்து பேசினார். பள்ளி
மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முதுகலை
ஆசி-ரியர் சரவணன் நன்றி கூறினார்.