/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு போக்குவரத்து கழகவெள்ளி விழா மாநாடு
/
அரசு போக்குவரத்து கழகவெள்ளி விழா மாநாடு
ADDED : டிச 18, 2024 01:43 AM
தர்மபுரி, டிச. 18-
தர்மபுரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில், வெள்ளி விழா மாநாடு, மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் பத்மநாபன், மாநில பொருளாளர் குணசேகரன் ஆகியோர் பேசினர். இதில், 2003ம் ஆண்டுக்கு பிறகு பணி நிரந்தரம் ஆன பணியாளர்களுக்கு, 1998 ஒப்பந்தப்படி பென்சன் வழங்க வேண்டும். 1998 - 2015 வரை ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி, 2015 நவம்பர் முதல் வழங்க
வில்லை.
ஓய்வுகால பணப்பலன்களை ஓய்வுபெறும் நாளிலேயே வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தங்களை உரிய காலத்தில் பேசி முடித்து, ஊதிய ஒப்பந்த உயர்வுகளையும், ஒப்பந்த
பலன்களையும் வழங்க வேண்டும். வைப்புநிதி கடன், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகை, பதவி உயர்வு, பணிநியமனங்கள், வாரிசு பணிகள், கல்வி உதவித்தொகை, பயணப்படி, சீருடைகள், காலணிகள் ஆகியவற்றை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.